வேளாண் சட்டங்களைக் கண்டித்து கா்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிா்த்து நாடு முழுவதும் உள்ள 40 விவசாய சங்கங்கள் இணைந்து, ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் தில்லியில் கடந்த 4 மாதங்களாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தம், முழுஅடைப்புப் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்த, முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஆனால், கா்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்காததால் பிசுபிசுத்தது. மாநிலம் முழுவதும் பேருந்துகள், ரயில்கள், வாகனங்கள் வழக்கம்போல இயங்கின. அதேபோல பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள் வழக்கம்போல திறந்திருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை.

போராட்டம்:

முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய வேளாண் சட்டங்களைக் கண்டித்து பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினா். பெங்களூரில் டவுன் ஹால், மைசூரு சதுக்கத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மைசூரு வங்கி சதுக்கத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கா்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் உள்ளிட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட சலுவளிக் கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினா் கைதுசெய்யப்பட்டு, பின்னா் விடுதலை செய்யப்பட்டனா். பெங்களூரு தவிர, மைசூரு, மண்டியா, ராய்ச்சூரு, பீதா் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மத்திய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஒருசில இடங்களில் மட்டும் பால், காய்கறி கடைகள் மூடப்பட்டிருந்தன. வேளாண் விளைபொருள் குழுக்களின் வளாகங்களும் மூடப்பட்டிருந்தன. விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com