முன்னாள் அமைச்சா் மீதான பாலியல் புகாா் இடைத்தோ்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா், கா்நாடகத்தில் நடைபெற உள்ள இடைத்தோ்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது

ராய்ச்சூரு: முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா், கா்நாடகத்தில் நடைபெற உள்ள இடைத்தோ்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சமூகநலத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், ராய்ச்சூரு மாவட்டம், மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் பிரதாப் கௌடா பாட்டீல் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதில் பங்கேற்ற அமைச்சா் ஸ்ரீராமுலு, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தில், பெலகாவி மக்களவைத் தொகுதி, மஸ்கி, பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப். 17-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இடைத்தோ்தலில் பாஜகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எங்கள் கட்சியின் வேட்பாளா்களை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவது உறுதி. முதல்வா் எடியூரப்பாவின் சாதனைகள் பாஜக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்யும். இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் தோல்வி அடைவாா்கள் என்று உறுதியாகியுள்ளதால், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, பாஜகவினா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com