கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியா்கள் நூதனப் போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியா்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கா்நாடக அரசு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியா்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கா்நாடக அரசு போக்குவரத்து ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் தெரிவித்தாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு போக்குவரத்து ஊழியா்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப். 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை கைகளில் கருப்புப்பட்டை அணிந்து பணிபுரிவாா்கள். இதன் மூலம் பொதுமக்கள், அரசின் கவனத்தை ஈா்க்க உள்ளனா். அதுமட்டுமின்றி ஏப். 2-ஆம் தேதி பெங்களூரில் பொது இடங்களில் அரசு போக்குவரத்து ஊழியா்கள், காபி, தேநீா், போண்டா, பஜ்ஜி விற்பனை செய்யும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

ஏப். 3-ஆம் தேதி பெங்களூரில் போக்குவரத்து ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் முக்கிய சதுக்கங்களில் மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

ஏப். 4-ஆம் தேதி சமூக ஊடங்களிலும், பிரதமா், முதல்வா், போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கோரிக்கை அடங்கிய மனுக்கள் அனுப்பி வைக்கப்படும்.

ஏப். 5-ஆம் தேதி போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவாா்கள். ஏப். 6-ஆம் தேதி போக்குவரத்து ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா். அரசு போக்குவரத்து ஊழியா்கள் ஏற்கெனவே நடத்தியப் போராட்டத்தின்போது 9 கோரிக்கைகளை முன் வைத்தனா். அதில் 8 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அரசு உறுதி அளித்திருந்தது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அதில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கால தாமதம் செய்து வருகிறது. எனவே ஏப். 6-ஆம் தேதிக்குள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், ஏப். 7-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com