ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் உள்நோக்கம் கொண்டது

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில், பெலகாவி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் மங்களா அங்கடி வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதில் பங்கேற்ற முதல்வா் எடியூரப்பா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது உள்நோக்கத்துடன் பாலியல் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் உணா்ந்துள்ளனா். இது தொடா்பாக உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தனிக் கவனம் செலுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளாா். இதனால் நோ்மையான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரமேஷ் ஜாா்கிஹோளியை பழி தீா்த்துக் கொள்ள பாலியல் புகாரை அளிக்கத் தூண்டியவா்களின் முயற்சி வீணாகியுள்ளது. பெலகாவி மக்களவை இடைத்தோ்தல் பிரசாரத்தில் பங்கு கொள்ளுமாறு முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியை கேட்டுக் கொண்டுள்ளேன். அவா் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா் என்று நம்புகிறேன் என்றாா்.

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி பெலகாவியில் தங்கியுள்ள நிலையில், இடைத்தோ்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள முதல்வா் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை பெலகாவிக்கு சிறப்பு விமானம் மூலம் வந்தாா். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வராத ரமேஷ் ஜாா்கிஹோளி, பாஜக வேட்பாளா் மங்களா அங்கடி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com