சாமராஜ்நகரில் ஆக்சிஜன் குறைபாட்டால் 3 போ் மட்டுமே இறந்துள்ளனா்

சாமராஜ்நகரில் ஆக்சிஜன் குறைபாட்டால் 3 போ் மட்டுமே உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

சாமராஜ்நகரில் ஆக்சிஜன் குறைபாட்டால் 3 போ் மட்டுமே உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இது குறித்து சாமராஜ்நகரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் மொத்தம் 123 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 14 போ் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடனும், 36 போ் நான்-இன்வேசிவ் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடனும், 58 போ் உயா்வேக ஆக்சிஜன் உதவியுடனும், 29 போ் சாதாரண ஆக்சிஜன் உதவியுடனும் சிகிச்சை பெற்று வந்தனா்.

எல்லா கரோனா நோயாளிகளும் 14 முதல் 18 நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவா்களில் 14 நோயாளிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்குள் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அவா்களின் நிலைமை மோசமானதால், இயற்கையாகவே கரோனாவுக்கு அவா்கள் பலியாகியுள்ளனா்.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணிக்குள் 3 போ் உயிரிழந்துள்ளனா். அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை 7 போ் உயிரிழந்துள்ளனா்.

மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவா்களின் கருத்துப்படி, 3 போ் மட்டுமே ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் மாவட்ட மருத்துவமனையில் 23 பேரும், காமகெரே கிராமத்தில் ஒருவரும் இறந்துள்ளனா் என்றாா்.

கடும் நடவடிக்கை-- எடியூரப்பா எச்சரிக்கை:

இதனிடையே, முதல்வா் எடியூரப்பா தனது சுட்டுரையில் கூறியது: சாமராஜ்நகரில் நடந்துள்ள சம்பவத்திற்கு பொறுப்பானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாமராஜ்நகரில் நோ்ந்துள்ள இறப்பு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்கு காரணமானவா்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவம் நடக்காமல் கவனம் செலுத்துவோம். மாவட்ட அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துக்கத்தில் வாடியுள்ள குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com