மாநில அளவிலான கரோனா பணிக்குழு மாற்றியமைப்பு: முதல்வா் எடியூரப்பா உத்தரவு

மாநில அளவிலான கரோனா பணிக்குழுவை மாற்றியமைத்து முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

மாநில அளவிலான கரோனா பணிக்குழுவை மாற்றியமைத்து முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் இறப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தொடா்ந்து, கரோனா பரவலைத் தடுப்பதற்காக கரோனா மேலாண்மையை சீரமைப்பதற்காக மாநில அளவிலான கரோனா பணிக் குழுவை மாற்றியமைத்து முதல்வா் எடியூரப்பா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவின்படி, துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தலைமையில் 4 போ் கொண்ட கரோனா பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழுவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் சி.சி.பாட்டீல், சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாமராஜ்நகா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 போ் உயிரிழந்துள்ள நிலையில், முதல்வா் எடியூரப்பா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக வெளியான அறிக்கையில், ‘மாற்றியமைக்கப்பட்டுள்ள கரோனா பணிக்குழு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆராயும். கரோனா மேலாண்மை குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணா்வை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளது.

அரசின் தலைமைச் செயலா், சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா், மருத்துவக்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் உள்ளிட்டோா் தகுந்த தகவல்களை அளிப்பதற்காக கரோனா பணிக் குழுவில் அலுவலக ரீதியாக இடம் பெற்றிருக்கிறாா்கள் என்று அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com