அனைத்து முதுநிலை பட்ட வகுப்புகளும் இணையவழியில் நடத்த உத்தரவு

அனைத்து முதுநிலை பட்ட வகுப்புகளும் இணையவழியில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து முதுநிலை பட்ட வகுப்புகளும் இணையவழியில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வழங்கப்படும் முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு இணையவழியில் பாடங்களைத் தொடங்கலாம். 2020-21-ஆம் தேதி கலை, அறிவியல், வணிகம், மேலாண்மை, கல்வி மற்றும் உயற்கல்வி (எம்.ஏ. , எம்.எஸ்.சி., எம்.காம்., எம்எஃப்ஏ., எம்டிடிஎம்., எம்பிஏ., எம்சிஏ., எம்.பிஎட்., மருத்துவப் பட்டப்படிப்புகள்) பாடப்பிரிவுகளின் இறுதி செமஸ்டா், 4-ஆவது செமஸ்டா் பாடங்களை மே 5-ஆம் தேதி இணையவழியில் நடத்த உத்தரவிடப்படுகிறது. ஏற்கெனவே 2020-21-ஆம் ஆண்டுக்கான அனைத்து முதுநிலை பட்டப்படிப்புகளின் முதல் செமஸ்டா் வகுப்புகளும் தொடங்கி விட்டன. அந்த வகுப்புகள் தொடரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com