பெங்களூரில் 100 படுக்கைகளுடன் கரோனா மருத்துவமனை: விமானப்படை திட்டம்

பெங்களூரில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா மருத்துவமனையை அமைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா மருத்துவமனையை அமைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், பெங்களூரு, ஜாலஹள்ளி உள்ள விமானப்படை நிலையத்தில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா மருத்துவமனையை அமைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய விமானப்படை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

பொதுமக்களுக்காக பெங்களூரு, ஜாலஹள்ளியில் உள்ள விமானப்படை நிலையத்தில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா மருத்துவமனையை அமைக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. முதல் 20 படுக்கைகள் மே 6-ஆம் தேதிக்குள் தயாராகி விடும். இதில் ஆக்சிஜன் வசதி இணைக்கப்பட்டிருக்கும். எஞ்சியுள்ள 80 படுக்கைகள், மே 20-ஆம் தேதிக்குள் தயாராகி விடும்.

பெங்களூரில் உள்ள விமானப்படையின் கட்டளை மருத்துவமனை வழங்கும் சிறப்பு மருத்துவா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவசாா் ஊழியா்களின் உதவியுடன் இந்த மருத்துவமனை நடத்தப்படும். இந்த மருத்துவமனைக்கு நோயாளிகளைச் சோ்க்கும் பொறுப்பு மாநில அரசு, பெங்களூரு மாநகராட்சியிடம் விடப்படும். மொத்தமுள்ள 100 படுக்கைகளில் 10 அவசர சிகிச்சை கால படுக்கைகளாகவும், 40 குழாய் வழி ஆக்சிஜன் செலுத்தும் படுக்கைகளாகவும் இருக்கும்.

எஞ்சியுள்ள 50 படுக்கைகளில் ஆக்சிஜன் உதவி இருக்கும். இந்த மருத்துவமனைக்கு மருந்தகம், ஆக்சிஜன், பாதுகாப்பு வசதிகளை மாநில அரசு வழங்க உறுதி அளித்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com