பொது முடக்க விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்: முதல்வா் எடியூரப்பா
By DIN | Published On : 11th May 2021 04:05 AM | Last Updated : 11th May 2021 04:05 AM | அ+அ அ- |

பெங்களூரு: பொது முடக்க விதிகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மே 24-ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வா் எடியூரப்பா தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘கரோனா தொற்றின் சங்கிலியைத் துண்டிப்பதற்காக 14 நாள்கள் கடுமையாக்கப்பட்ட பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளோம். பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், கரோனா தொற்றுப் பரவலை முறியடிக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.