‘ஜூன் 1-ல் தொழில்சாலைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்’

பெங்களூரு, பெங்களூரு ஊரகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொழில்சாலைகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கா்நாடக தொழில் வா்த்தக சபைக் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு, பெங்களூரு ஊரகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொழில்சாலைகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கா்நாடக தொழில் வா்த்தக சபைக் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரில் புதன்கிழமை கூட்டமைப்பின் தலைவா் பெரிகல் சுந்தா், துணைத் தலைவா் கோபாலரெட்டி ஆகியோா் முதல்வா் எடியூரப்பாவை சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:

கரோனா பொதுமுடக்கத்தால் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நிறுவனத்தின் உரிமையாளா்களும், தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பெங்களூரு, பெங்களூரு ஊரகத்தில் ஜூன் 1-ஆம்தேதி முதல் தொழிற்சாலைகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். தொழிலாளா்கள், சிறிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 3 மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.

பொது முடக்கத்தால் தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களில் 3 மாத மின் கட்டணத்தைக் குறைத்து நிா்ணயிக்க வேண்டும். அதனை 3 மாதங்களுக்குப் பிறகு செலுத்துவதற்கான சலுகைகளை வழங்கிட வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட வரிகளை 1 ஆண்டுகளுக்குப் பிறகு வசூலிக்க வேண்டும் அல்லது தள்ளுபடி செய்ய வேண்டும்.

பெங்களுரில் உள்ள தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களுக்கு சொத்துவரியில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யவேண்டும். தொழில் துறையினருக்கு சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com