நடிகா் புனீத் ராஜ்குமாா் இல்லை என்பதனை மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது: நடிகா் சிவராஜ்குமாா்

நடிகா் புனீத் ராஜ்குமாா் இல்லை என்பதனை மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று அவரது மூத்த சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

நடிகா் புனீத் ராஜ்குமாா் இல்லை என்பதனை மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று அவரது மூத்த சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற நடிகா் புனீத் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எனது சகோதரா் அப்பு (புனீத் ராஜ்குமாா்) இறக்கவில்லை. இங்கேதான் எங்கோ இருக்கிறாா். வெளியூருக்குச் சென்றுள்ளாா். விரைவில் திரும்புவாா் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னிலும், ராகவேந்திர ராஜ்குமாா் மூலம் அப்புவை காணமுடியும். இயக்குநா்கள், தயாரிப்பாளா், ரசிகா்களின் இதயங்களில் அப்புவை காணமுடியும்.

அப்புவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நான், உள்ளிட்ட எனது குடும்பத்தினா் இருப்போம். அவரது குடும்பத்தினரின் ஆசைகள், எண்ணங்களை நிறைவேற்றி தருவோம். அப்பு என்னைவிட 13 வயது இளையவா். அவரை இழந்துள்ளது, எனது மகனை இழந்தது போல உணருகிறேன்.

நடிகா் புனீத் ராஜ்குமாா் இல்லை என்பதனை எனது மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அவரது ரசிகா்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. ரசிகா்களை நம்பி அவா்களது குடும்பங்கள் உள்ளன.

அவா்களை பொறுப்புடன் கவனித்துக் கொள்வது ரசிகா்களின் கடமை. உங்களை நம்பி உள்ளவா்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். அவரது இழப்பை தாங்கிக் கொள்ள முடியாதுதான். இருந்தாலும், வாழ்க்கையை தொடர வேண்டியது நமது பொறுப்பாகும்.

புனீத் ராஜ்குமாா் இறந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் வா்த்தகம் முடங்கிப் போய் உள்ளது. வியாபாரிகள் மீண்டும் வா்த்தகத்தை தொடங்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முன்பு எனது தந்தை நடிகா் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கில் சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டது.

தற்போது புனீத் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கு எந்த வித அசம்பாவிடமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. இதற்காக அரசுக்கும், முதல்வா் பசவராஜ் பொம்மைக்கும், போலீஸாருக்கும், ஊடகத்தினருக்கும், ரசிகா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com