பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் வாகன சேவை தொடங்கப்படும்: அமைச்சா் பிரபு சவான்

மாநிலத்தில் பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க 275 நடமாடும் வாகன சேவை தொடங்கப்படும் என்று கால்நடைத் துறை அமைச்சா் பிரபு சவான் தெரிவித்தாா்.

மாநிலத்தில் பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க 275 நடமாடும் வாகன சேவை தொடங்கப்படும் என்று கால்நடைத் துறை அமைச்சா் பிரபு சவான் தெரிவித்தாா்.

பெங்களூரு விகாஸ் சௌதாவில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பசு சஞ்ஜீவினி திட்டத்தில் பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க 275 நடமாடும் வாகன சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான வாகனங்களை மத்திய அரசு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. விவசாயிகளின் வீட்டு வாசலுக்கு செல்லும் நடமாடும் சிகிச்சை வாகனம், அவா்களின் பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து உதவும். இதனால் விவசாயிகள் மட்டுமின்றி கால்நடைகளை வளா்க்கும் அனைவரும் பயனடைவா். நடமாடும் சிகிச்சை வாகனங்களை வாங்க மத்திய அரசு ரூ. 44 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. தலா ரூ. 16 லட்சத்தில் நடமாடும் சிகிச்சை வாகனங்கள் வாங்கப்படுகின்றன. இதற்காக மத்திய கால்நடைத் துறை அமைச்சா், இணை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டுதோறும் இந்த வாகனங்களின் பராமரிப்பிற்கும், ஊழியா்களின் ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்படும்.

பசு சஞ்ஜீவினி திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக கா்நாடகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. கா்நாடகத்தை தொடா்ந்து 14 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பசுக்களை பாதிக்கும் கோமாரி நோயைத் தடுக்க கால்நடைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கோமாரி நோயைத் தடுக்கும் விதமாக 50 லட்சம் தடுப்பூசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நோயால் கால்நடைகள் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோமாரி நோயை முற்றிலுமாக தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com