‘மருத்துவத்துறையில் இந்தியா சாதனைகளை புரிந்து வருகிறது’

மருத்துவத்துறையில் இந்தியா சாதனைகளை புரிந்து வருவதாக இதய அறுவை சிகிச்சை வல்லுநா் சத்யாகி நம்பாலா தெரிவித்தாா்.

மருத்துவத்துறையில் இந்தியா சாதனைகளை புரிந்து வருவதாக இதய அறுவை சிகிச்சை வல்லுநா் சத்யாகி நம்பாலா தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் குறுகிய காலத்தில் 100 முறை ரோபோ அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்ததற்காக இதய அறுவை சிகிச்சை வல்லுநா் சத்யாகி நம்பாலாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவா் பேசியது:

முன்பெல்லாம் இதய அறுவை சிகிச்சை 30 மணி நேரம் வரை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பங்களால் அதன் நேரம் பல மடங்கு குறைந்துள்ளது. அண்மையில் ரோபோ உதவியுடன் இதய அறுவை சிகிச்சையை 70 நிமிடங்களுக்குள் முடித்துள்ளோம். இது உலகசாதனையாகும். முன்பெல்லாமல் மருத்துவ சிகிச்சைக்கும் மேலை நாடுகளுக்கு சென்று வந்த நிலைமை மாறி, இந்தியாவில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெற மேலை நாட்டினா் வரும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியா மருத்துவத்துறை மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com