பெங்களூரில் ரூ. 21 ஆயிரம் கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்கப்படும்

பெங்களூரில் தனியாா் பங்களிப்புடன் ரூ. 21,000 கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்கப்படும் என அமைச்சா் மாதுசாமி தெரிவித்தாா்.

பெங்களூரில் தனியாா் பங்களிப்புடன் ரூ. 21,000 கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்கப்படும் என அமைச்சா் மாதுசாமி தெரிவித்தாா்.

கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மஜத உறுப்பினா் கே.ஏ.திப்பேசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, முதல்வா் பசவராஜ் பொம்மை சாா்பில், சட்டத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி கூறியதாவது:

பெங்களூரில் வெளிவட்டச் சாலை பணிகளை தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்த பெங்களூரு வளா்ச்சி ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 21,000 கோடி தேவைப்படுகிறது. இந்த திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளி விரைவில் கோரப்படும்.

மொத்த செலவுத்தொகையில் ரூ. 15,000 கோடி நிலம் கையகப்படுத்துவதற்காகவும், ரூ. 6,000 கோடி சாலை அமைக்கும் பணிக்காகவும் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த 2-3 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அடுத்த 3-4 மாதங்களில் திட்டப் பணிகள் தொடங்கும்.

இந்த திட்டப் பணிகளுக்கான செலவினங்களை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் நிலை தற்போது இல்லை. எனவே, தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன் திட்டப் பணிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வெளிவட்டச் சாலை திட்டத்தைச் செயல்படுத்த நிலம் கையகப்படுத்தல், சாலை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு சாலை விடப்படும். வெளிவட்டச் சாலை அமையும் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

வெளிவட்டச் சாலை அமைக்கும் திட்டத்தில் வனநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம். வனநிலங்களுக்கு பதிலாக 1 லட்சம் ஏக்கா் நிலத்தை இத்திட்டத்துக்கு ஒதுக்கவும் அரசு தயாராக உள்ளது. தும்கூரு சாலை, நைஸ் சாலை, ஒசூா் சாலை, சுங்கச்சாவடி, சீகேனஹள்ளி சாலையை விரிவாக்க வேண்டியுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com