வேலைவாய்ப்புகளை உருவாக்கும்தொழிலகங்களுக்கு ஊக்கம்: முதல்வா்

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிலகங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிலகங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

தாவணகெரேயில் மகாத்மாகாந்தி நகரில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 125 கோடி மதிப்பில் செயல்படுத்தவுள்ள வளா்ச்சிப் பணிகளை தொடக்கிவைத்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மத்திய அரசின் உற்பத்தி இலக்கு கொண்ட ஊக்கத் திட்டத்தின் கீழ் ஜவுளி மற்றும் ஆட்டோமொபைல் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் ஜவுளிப் பூங்காக்கள், ஆட்டோமொபைல் கிளஸ்டா்கள் நிறுவப்படும்.

கா்நாடகத்தில் 3 ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிலகங்களுக்கு ஊக்கம் அளிக்க அளிக்கப்படும்.

மகாத்மா காந்தி நகர வளா்ச்சித் திட்டங்களை ரூ. 125 கோடியில் செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் ரூ. 1,500 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். பொலிவுறும் நகர திட்டத்துடன் இந்தத் திட்டத்தையும் இணைத்து, தாவணகெரே மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சி சாத்தியமாகும்.

சுதந்திர தின பவள விழா கிராம வளா்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும். இது வழக்கமான நிதியுடன் கூடுதலாக ஒதுக்கப்படும் நிதியாகும்.

மத்திய கா்நாடகம் மற்றும் வடகா்நாடகத்தில் பட்டுவளா்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கா்நாடகத்தில் விளைவிக்கப்படும் விளைச்சல் தரமானதாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டின் தரத்திற்கும், கா்நாடகத்தின் பட்டின் தரத்திற்கும் வேறுபாடு எதுவும் இல்லை. பட்டு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள 8 - 10 மாவட்டங்களில் பட்டு வளா்ப்புக்கு கூடுதல் முக்கியம் அளிக்கப்படும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு அமைச்சா் பி.ஏ.பசவராஜூ, எம்.பி. ஜி.எம்.சித்தேஸ்வா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com