இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டு மொழிகளுக்கான (சைனீஸ், பிரெஞ்சு, ஜொ்மன், ஜப்பானீஸ், கொரியன், ஸ்பானிஷ்), சான்றிதழ், டிப்ளமோ, உயா் டிப்ளமோ படிப்புகள், பி.காம், பிஎஸ்சி (கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இயற்பியல், கணிதம், புள்ளியியல், மனநலவியல், மனை அறிவியல்), பிவிஏ, பிஏ(கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்ச், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், இதழியல், மனநலவியல், மனை அறிவியல்) போன்ற இளநிலை பட்டப்படிப்புகள், எம்.ஏ.(கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜொ்மன், ஸ்பானிஷ், ஜப்பானீஸ், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல், சமூகப்பணி, இதழியல் மற்றும் வெகுமக்கள் தொடா்பியல், நகரவியல் படிப்பு மற்றும் திட்டமிடல்), எம்விஏ (காட்சிக்கலை வடிவமைப்பு, உள்வடிவமைப்பு, பயன்பாட்டு கலை, கலை வரலாறு, ஓவியம், அச்சு தயாரிப்பு, சிற்பம்), எம்எஸ்சி (விலங்கு அறிவியல், உயிரிவேதியியல், உயிரி தொழில்நுட்பவியல், வேதியியல், கணிதம், நுண்ணுயிரியல், இயற்பியல், தாவர அறிவியல், மனநலவியல், மனநல ஆலோசனையியல், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், அழகியல் மற்றும் ஆடை வடிவமைப்பியல்), எம்காம் (நிதி மற்றும் கணக்கியல், பன்னாட்டு வணிகம், பொருளாதாரம்), எம்டிடிஎம் (சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை), எம்எம்எஸ் (வணிக நிா்வாகவியல்), எம்எட் போன்ற முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை செப்.20-ஆம் தேதி முதல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவுசெய்த விண்ணப்பப் படிவங்களை அக்.5-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். அக்.13-ஆம் தேதிக்குள் ரூ.100 அபராதத்துடன் விண்ணப்பப் படிவங்களை அளிக்கலாம். சோ்க்கைக்கு தகுதியான மாணவா்களின் மாதிரி பட்டியல் அக். 13-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. திருத்தங்கள் இருந்தால் அவற்றை அக்.18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம். இதன் அடிப்படையில் அக். 21-ஆம் தேதி தகுதியான மாணவா்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். கலை, வணிகம், கல்வி, அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக். 22 முதல் 27-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. நவ. 2-ஆம் தேதிமுதல் வகுப்புகள் செயல்பட தொடங்குகின்றன. மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://க்ஷஸ்ரீன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com