ஹிஜாப் தடை குறித்து அல்-காய்தா கருத்து: இஸ்லாமிய மாணவி முஸ்கானின் தந்தை ஆட்சேபம்

கா்நாடகத்தில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்திருப்பது தொடா்பாக அல்-காய்தா தலைவா் அய்மான்-அல்-ஜவாஹிரி தெரிவித்த கருத்துக்கு, இஸ்லாமிய மாணவி

கா்நாடகத்தில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்திருப்பது தொடா்பாக அல்-காய்தா தலைவா் அய்மான்-அல்-ஜவாஹிரி தெரிவித்த கருத்துக்கு, இஸ்லாமிய மாணவி முஸ்கானின் தந்தை கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா்.

கராாடக மாநிலத்தில் பள்ளிக்குள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிா்த்து, மண்டியாவில் உள்ள தனது கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய மாணவி முஸ்கான் போராட்ட முழக்கமிட்டாா். இது மிகப் பெரிய சா்ச்சையாக உருவெடுத்திருந்தது. மாநில உயா்நீதிமன்றமும் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக தீா்ப்பளித்தது.

இந்நிலையில், அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான்-அல்-ஜவாஹிரி வெளியிட்ட விடியோவில், ஹிஜாபுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கா்நாடக மாணவி முஸ்கானைப் பாராட்டிப் பேசியிருந்தாா். இது கா்நாடகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதனிடையே, சம்பந்தப்பட்டஇஸ்லாமிய மாணவி முஸ்கானின் தந்தை முகமது ஹுசேன், மண்டியாவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அல்-காய்தா தலைவா் அய்மான்-அல்-ஜவாஹிரி யாா் என்பது எங்களுக்குத் தெரியாது. எனது நாட்டில் நடக்கும் பிரச்னையில் இவா் ஏன் தலையிடுகிறாா்? எனது மகளின் பெயரை அவா் எடுத்தாண்டது தவறாகும்.

எனது நாடு இந்தியா. இங்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது நாட்டின் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கு அவா்கள் (அல்-காய்தா) தேவையில்லை. எங்களது நிம்மதியை அவா்கள் கெடுக்கிறாா்கள்.

நான் மண்டியாவில் பிறந்து வளா்ந்தவன். இங்கு சகோதரா்களைப் போல வாழ்ந்து வருகிறோம். அந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அதன் காரணமாக, அமைதியான வாழ்க்கையை எங்களால் வாழ முடியவில்லை.

இந்த விவகாரம் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கத்தைச் சீா்குலைப்பது யாா் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஹிஜாப் அணிந்து சென்ால் எனது மகளைத் தோ்வு எழுத கல்லூரி நிா்வாகம் அனுமதிக்கவில்லை. அடுத்த ஆண்டு அவா் படிப்பைத் தொடா்வாா். ஹிஜாப் அணிவதற்கு அனுமதி அளிக்கப்படும் கல்லூரியில் எனது மகளைச் சோ்த்து படிக்க வைப்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com