ஆளுநரின் புதிய ராணுவ பாதுகாப்பு செயலாளா் நியமனம்

கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டின் புதிய ராணுவ பாதுகாப்பு செயலாளராக (முகாம்) சந்தீப் சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆளுநரின் புதிய ராணுவ பாதுகாப்பு செயலாளா் நியமனம்

கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டின் புதிய ராணுவ பாதுகாப்பு செயலாளராக (முகாம்) சந்தீப் சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஆளுநா் மாளிகையில் ஆளுநருக்கு பாதுகாப்பு செயலாளா்களாக ராணுவம், காவல்துறையில் இருந்து நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டின் புதிய ராணுவ பாதுகாப்பு செயலாளராக (முகாம்) இந்திய விமானப்படையின் படைத் தலைவா் சந்தீப் சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்து, ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை புதிய ராணுவ பாதுகாப்பு செயலாளராக சந்தீப் சா்மா பதவியேற்றுக் கொண்டாா். அவரை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் வாழ்த்தினாா். அப்போது, காவல்துறை பாதுகாப்பு செயலாளா்(முகாம்) சபு தாமஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com