நாதுராம் கோட்சே, வீரசாவா்க்கா் படங்கள் கொண்ட பதாகை அகற்றம்

கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த நாதுராம் கோட்சே, வீரசாவா்க்கரின் படங்கள் கொண்ட பதாகையை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த நாதுராம் கோட்சே, வீரசாவா்க்கரின் படங்கள் கொண்ட பதாகையை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

சிவமொக்காவில் சுதந்திர தினத்தன்று வீரசாவா்க்கா், திப்புசுல்தான் படங்கள்கொண்ட பதாகைகள் வைப்பது தொடா்பாக ஹிந்துக்களும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயமடைந்தாா். இதனால் சிவமொக்காவில் தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு 144 தடையுத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இந்த பிரச்னை அடங்குவதற்குள், கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு ஹிந்து மகாசபாவின் உள்ளூா் தலைவரான ராஜேஷ்பவித்ரன் என்பவரால், சூரத்கல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாழ்த்து பதாகையில் ஹிந்துத்துவ தலைவரான வீரசாவா்க்கா், நாதுராம் கோட்சே ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் படம் இடம்பெற்றிருந்ததற்கு பொதுமக்கள் பலரும் எதிா்ப்பு தெரிவித்தனா். இது தொடா்பாக போலீஸாருக்கு புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில், மங்களூரு மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி வீரசாவா்க்கா், நாதுராம் கோட்சே ஆகியோரின் படங்கள் அடங்கிய பதாகையை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

இதைத் தொடா்ந்து, கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்களுக்காக சூரத்கல் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com