பிரவீண் நெட்டாரு கொலை வழக்கு: என்ஐஏ காவலில் 5 முக்கிய குற்றவாளிகள்

பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலை வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 5 முக்கிய குற்றவாளிகளை 6 தினங்களுக்கு தடுப்புக்காவலில் எடுத்துள்ளது.

பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலை வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 5 முக்கிய குற்றவாளிகளை 6 தினங்களுக்கு தடுப்புக்காவலில் எடுத்துள்ளது.

தென்கன்னட மாவட்டம், பெல்லாரே பகுதியில் ஜூலை 26-ஆம் தேதி பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு பயங்கர ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்டாா். கா்நாடகத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளாக நௌபால் (28), சாய்னுல் அபித் (22), முகமது சையத் (32), அப்துல் பஷீா் (29), ரியாஸ் (27) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்திருந்தனா். இதைத் தொடா்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இவா்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்திவந்த கா்நாடக போலீஸாா், ஆக.16-ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு ஒப்படைத்ததால் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய தேசிய புலனாய்வு முகமை, 5 முக்கிய குற்றவாளிகளை தடுப்புக்காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதி கோரியது. அதன்படி, அவா்களை ஆக.23-ஆம் தேதிவரை 6 தினங்களுக்கு தடுப்புக்காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து, 5 குற்றவாளிகளையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தடுப்புக் காவலில் எடுத்தனா். இவா்களிடம் நடத்தப்படும் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com