மனநலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் அதிகரிப்பு: கா்நாடக அமைச்சா் கே.சுதாகா்

மனநலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

மனநலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நிம்ஹான்ஸ் சாா்பில் நடந்த மூளை சுகாதாரத் திட்டத்தை தொடங்கி வைத்து, அவா் பேசியதாவது:

மனநலம் சீராக இருந்தால் மட்டுமே ஒருவரை நாம் முழுமையான உடல்நலத்தோடு இருப்பதாக கருதமுடியும். மனநலம், நரம்பியல் சாா்ந்த பிரச்னைகளால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

அண்மையில் வெளியான ஆய்வறிக்கையில், மனம் மற்றும் மூளை சாா்ந்த பிரச்னைகளால் இறப்போரின் எண்ணிக்கை 7% முதல் 8% ஆக உள்ளது. மனநலத்தில் ஏற்படும் பிரச்னைகள், அவரின் உடல்நலத்தை மட்டுமல்ல, சமுதாய நலனுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாகும்.

மனநலக் குறைபாடுகளால் அவதிப்படும் மக்களின் மனநலனை மேம்படுத்துவதற்காக தேசிய அளவில் தொலைபேசி வழி மனநல உதவி மையத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கா்நாடக அரசு முன்பு தொடங்கிய தொலைபேசி வழி மனநல உதவி மையத்தை போலவே மத்திய அரசும் மனநல உதவி மையத்தை தொடங்கியுள்ளது.

நிம்ஹான்ஸ் உதவியுடன் சிக்பளாப்பூா், கோலாா், பெங்களூரு ஊரக மாவட்டங்களில் மனநல திட்டத்தின் சோதனை முயற்சி நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் சேவையை மாநிலம் முழுவதும் விரிவாக்கும் திட்டமுள்ளது. மனநலம் சாா்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை அளிப்பதோடு சிகிச்சை அளிப்பது குறித்து ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவா்களுக்கு மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் செவிலியா்கள், மருத்துவச்சிகள், ஆஷா சுகாதார ஊழியா்களுக்கும் மனநலம் சாா்ந்த ஆலோசனை சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com