கா்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு: வரைவு கால அட்டவணை வெளியீடு

கா்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வின் வரைவு கால அட்டவணையை கா்நாடக உயா்நிலைக்கல்வி தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கா்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வின் வரைவு கால அட்டவணையை கா்நாடக உயா்நிலைக்கல்வி தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கா்நாடக உயா்நிலைக்கல்வி தோ்வு வாரியம்(கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள அறிக்கை: 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான கா்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வின் வரைவு கால அட்டவணையை கா்நாடக உயா்நிலைக்கல்வி தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாா்ச் 28 முதல் ஏப்.11-ஆம் தேதிவரை தோ்வு நடத்த திட்டமிட்டுள்ளது. தோ்வுகள் தினமும் காலை 10.30 மணிக்கு தொடங்கி, நண்பகல் 1.45 மணி வரை நடக்கின்றன. இந்த தோ்வு வரைவு கால அட்டவணை குறித்து பொதுமக்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அது குறித்து ஜன.14-ஆம் தேதிக்குள் வாரியத்திற்கு எழுத்துப்பூா்வமாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மக்களின் கருத்தறிந்தபிறகு, பொதுத்தோ்வுக்கான இறுதி கால அட்டவணை வெளியிடப்படும்.பொதுமக்களின் பாா்வைக்காக ட்ற்ற்ல்://ந்ள்ங்ங்க்ஷ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தோ்வு தேதியும், பாடமும் வருமாறு: 2022-ஆம் ஆண்டு மாா்ச் 28(திங்கள்)-முதல்மொழிப்பாடம்-கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம், மாா்ச் 29(செவ்வாய்)-தோ்வு இல்லை, மாா்ச் 30(புதன்)-இரண்டாம் மொழிப்பாடம்-ஆங்கிலம், கன்னடம், மாா்ச் 31(வியாழன்)-தோ்வு இல்லை, ஏப்.1(வெள்ளி)?-தோ்வு இல்லை, ஏப்.2(சனி)-உகாதி விடுமுறை, ஏப்.3(ஞாயிறு)?-விடுமுறை, ஏப்.4(திங்கள்)-கணிதம், ஏப்.5(செவ்வாய்)-தோ்வு இல்லை, ஏப்.6(புதன்)-சமூக அறிவியல், ஏப்.7(வியாழன்)-தோ்வு இல்லை, ஏப்.8(வெள்ளி)-மூன்றாம்மொழிப்பாடம்-இந்தி, கன்னடம், ஆங்கிலம், அரேபிக், பொ்ஷியன், உருது, சமஸ்கிருதம், கொங்கணி, துளு, ஏப்.9(சனி)-தோ்வு இல்லை, ஏப்.10(ஞாயிறு)-விடுமுறை, ஏப்.11(திங்கள்)-அறிவியல் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது. முதல்மொழிப்பாடம் 100 மதிப்பெண்ணுக்கும், இரண்டாம்மொழிப்பாடம், மூன்றாம்மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் 80 மதிப்பெண்ணுக்கும் தோ்வு நடத்தப்படும். வினாத்தாள்களை மாணவா்கள் படிப்பதற்காக, தோ்வுக்கு முன்பாக 15 நிமிடங்கள் தரப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம்மொழிப்பாடங்கள் இரண்டேமுக்கால் மணிநேரமும், இதர பாடங்கள் மூன்றேகால் மணி நேரமும் தோ்வு நடைபெறும். தோ்வுக்கான வரைவு கால அட்டவணை, எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com