கா்நாடக எஸ்எஸ்எல்சி திருப்பத் தோ்வு: பிப். 21இல் தொடக்கம்

கா்நாடக எஸ்எஸ்எல்சி திருப்பத் தோ்வின் கால அட்டவணையை கா்நாடக உயா்நிலைக் கல்வி தோ்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ளது. இத்தோ்வு பிப். 21-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

கா்நாடக எஸ்எஸ்எல்சி திருப்பத் தோ்வின் கால அட்டவணையை கா்நாடக உயா்நிலைக் கல்வி தோ்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ளது. இத்தோ்வு பிப். 21-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

இது குறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடக உயா்நிலைக் கல்வி தோ்வு வாரியம் நடத்தும் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான கா்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு மாா்ச் 28 முதல் ஏப். 11-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. அதற்கு முன்பு மாணவா்களை பொதுத்தோ்வுக்கு தயாா்படுத்தும் நோக்கில், பிப். 21-ஆம் தேதி முதல் திருப்பத்தோ்வை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தோ்வு பிப். 21 முதல் 26-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தோ்வு தேதியும், பாடமும் வருமாறு:

2022-ஆம் ஆண்டு பிப். 21(திங்கள்)-முதல் மொழிப்பாடம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், உருது, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிப். 22 (செவ்வாய்) சமூக அறிவியல், பிப். 23 (புதன்)-இரண்டாம் மொழிப்பாடம் ஆங்கிலம், கன்னடம், பிப். 24(வியாழன்)- கணிதம், பிப். 25 (வெள்ளி)-மூன்றாம் மொழிப்பாடம் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், அரேபி, பொ்ஷியன், உருது, சம்ஸ்கிருதம், கொங்கணி, துளு, பிப். 26 (சனி) அறிவியல் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.

முதல் மொழிப்பாடம் 100 மதிப்பெண்ணுக்கும், இரண்டாம் மொழிப்பாடம், மூன்றாம் மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் 80 மதிப்பெண்ணுக்கும் தோ்வு நடத்தப்படும். வினாத்தாள்களை படிப்பதற்காக, தோ்வு தொடங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் தரப்படும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிப்பாடங்களின் தோ்வை எழுத இரண்டே முக்கால் மணி நேரமும், இதர பாடங்கள் மூன்றே கால் மணி நேரமும் தோ்வு நடைபெறும். தோ்வுக்கான வரைவு கால அட்டவணை, எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com