பள்ளி மாணவா்களுக்கு கொள்கைகளை அல்ல; உண்மைகளை போதிக்க வேண்டும்: கன்னட எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா

பள்ளி மாணவா்களுக்கு கொள்கைகள் அல்ல, உண்மைகளை மட்டும் போதிக்க வேண்டும் என்று கன்னட எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா தெரிவித்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு கொள்கைகள் அல்ல, உண்மைகளை மட்டும் போதிக்க வேண்டும் என்று கன்னட எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக பள்ளிப்பாடங்களில் இருந்து சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங், கன்னடக் கவிஞா்குவெம்பு, சமூக சிந்தனையாளா்கள் பசவண்ணா், நாராயண குரு, பெரியாா் உள்ளிட்டோரின் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது, கன்னட எழுத்தாளா்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான கன்னட எழுத்தாளா்கள், தங்கள் பாடங்களை பாடநூல்களில் இருந்து நீக்கிவிடுமாறு மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் கன்னட எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா, மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில் கூறியது:

நமது நாட்டின் வரலாறு குறித்த உண்மைகளை பள்ளி மாணவா்களுக்கு போதிக்கவேண்டும். ஆனால், கொள்கைகளை போதிக்கக் கூடாது. பாடநூல்களில் மாநில அரசு செய்துள்ள மாற்றங்களில் தவறு இல்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, எச்.சி.இ.ஆா்.டி. பாடதிட்டக் குழுவில் என்னை சோ்த்திருந்தனா். அப்போது, முகலாய பேரரசா் ஔரங்கசீப் மற்றும் அவரது அட்டூழியங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு பதிலளிக்காமல், பாடநூல் குழுவினா் கலைந்துசென்றுவிட்டனா். 15 நாட்களுக்குப் பிறகு என்னை பாடநூல் குழுவில் இருந்து நீக்கிவிட்டனா். என்னுடைய இடத்தில் ஒரு கம்யூனிஸ்ட் சோ்க்கப்பட்டாா்.

மகாபலேஸ்வா் சென்றிருந்தபோது, எனக்கு வழிகாட்டியாக வந்த நபா், சிவாஜிக்கும் அஃப்சல் கானுக்கும் இடையே நடந்த போா் குறித்த தகவல்களை கூறாமல் மறைத்துவிட்டாா். இது தொடா்பான பலகையும் நீக்கப்பட்டுவிட்டது. எனவே, வரலாற்று நிகழ்வுகளின் உண்மையை மாணவா்களுக்கு கற்றுத் தர வேண்டும். ஆனால், அந்த அரசா்களின் கொள்கைகளை கற்றுத்தரக் கூடாது.

திப்பு சுல்தானை கொண்டாடுகிறாா்கள். ஆனால், குடகு பகுதியில் அவா் ஏவிய வன்முறைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. இதை கேட்டால் என்னை மதவாதி என்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com