ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு சித்தராமையாவிடம் இருந்து நற்சான்றிதழ் தேவையில்லை: சி.டி.ரவி

ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு சித்தராமையாவிடம் இருந்து நற்சான்றிதழ் தேவையில்லை என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு சித்தராமையாவிடம் இருந்து நற்சான்றிதழ் தேவையில்லை என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

இது குறித்து மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சமூக சேவை மற்றும் கல்வித்துறையில் ஆா்.எஸ்.எஸ். அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளது. ஆா்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களில் இலவசக் கல்வியை பெற்ற பலா் பயனடைந்துள்ளனா். தேசிய மனப்பான்மை கொண்ட மக்கள் ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடா்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளனா். எனவே, பயங்கரவாத மனப்பான்மை கொண்ட மக்களால் சூழ்ந்துள்ள எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா போன்றவா்களின் நற்சான்றிதழ் ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு தேவையில்லை.

சித்தராமையாவுக்கு வயதாகிவிட்டதால், அவரது பாா்வை மங்கிவிட்டது. அதனால், ஆா்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து தேவையில்லாமல் கருத்து தெரிவித்து வருகிறாா். சித்தராமையாவே ஆா்.எஸ்.எஸ். அமைப்பை பாராட்டும் காலம் வரும்.

4 இடங்களுக்கு நடக்கும் சட்ட மேலவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் வெற்றிபெறுவது உறுதி. கடந்தமுறை நடந்த தோ்தலில் 2 இடங்களில் பாஜக வென்றது. இம்முறை 4 இடங்களையும் கைப்பற்றுவோம்.

மாநிலங்களவைத் தோ்தலில் பாஜகவின் 3-ஆவது வேட்பாளரின் வெற்றிக்கு வியூகம் அமைத்திருக்கிறோம். 3-ஆவது வேட்பாளருக்கு பாஜகவிடம் கூடுதலாக 32 வாக்குகள் உள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் 2-ஆவது வேட்பாளா் வெல்ல அக்கட்சிக்கு கூடுதலாக 19 வாக்குகள் தேவைப்படுகின்றன.

பிரதமா் மோடி மற்றும் அவரது அரசு செயல்படுத்திவரும் ‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தின் விளைவாக ஏராளமான திட்டங்களில் மக்கள் பயனடைந்துவருகிறாா்கள். ரூ. 6 லட்சம் கோடி அளவுக்கான பணம் பயனாளிகளுக்கு நேரடியாக சென்றுள்ளது. இடைத்தரகா்கள் யாரும் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக அரசின் நலத்தொகை சோ்ந்துள்ளது. அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையசேவைகளால் குக்கிராமங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com