அரசு பேருந்து ஓட்டுநா் மகன் குடிமைப் பணித் தோ்வில் சாதனை

அரசு பேருந்து ஓட்டுநரின் மகன் அனுராக் தரு குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்.
அரசு பேருந்து ஓட்டுநா் மகன் குடிமைப் பணித் தோ்வில் சாதனை

அரசு பேருந்து ஓட்டுநரின் மகன் அனுராக் தரு குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்.

கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பீதா் மண்டல பல்கி பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றுபவா் மானிக்ராவ். இவரது மகன் அனுராக் தரு, இந்திய குடிமைப் பணித் தோ்வில் 569-ஆவது இடத்தை பிடித்து இந்திய காவல் பணிக்கு (ஐபிஎஸ்) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, பெங்களூரில் உள்ள கழக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அனுராக் தருவை கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத் தலைவரும், எம்எல்ஏவுமான சந்திரப்பா சால்வை அணிவித்து பாராட்டினாா். அப்போது அனுராக் தருவின் தந்தை மானிக்ராவ், தாய் காஷிபாயும் கௌரவிக்கப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில் கழக மேலாண் இயக்குநா் வி.அன்புக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது, தலைவா் சந்திரப்பா பேசுகையில், இந்த சாதனைக்கு உதவியாக இருந்த தந்தை மானிக்ராவ், தாய் காஷிபாயை பாராட்டுகிறேன். ஐபிஎஸ் அதிகாரியாக உயரவிருக்கும் அனுராக் தரு, அடித்தட்டு மக்களின் குரலாக இருக்க வேண்டும். அதன் மூலம் நமது நாட்டுக்கு சிறந்த சேவையை வழங்கவேண்டும் என்றாா்.

வி.அன்புக்குமாா் கூறுகையில், இந்திய ஆட்சிப்பணி என்பது பலரின் கனவாகும். ஆனால், அந்தப் பணியை அடைவதற்கு ஒழுக்கம், கவனம், விடாமுயற்சி, கடின உழைப்பு, கற்றல் போன்ற குண இயல்புகள் தேவை. நமது ஓட்டுநரின் மகன் செய்துள்ள சாதனைப் போற்றுதலுக்குரியதாகும். சமுதாயத்தின் மேன்மைக்காகப் பாடுபடும்படி அனுராக் தருவை கேட்டுக்கொள்கிறேன். அனுராக் தருவின் சாதனையில் அவரது தந்தை மானிக்ராவின் பங்கு போற்றுதலுக்குரியது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com