இளநிலை நிகழ்த்துக்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

இளநிலை நிகழ்த்துக்கலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளநிலை நிகழ்த்துக்கலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடகமாநில டாக்டா் ஹங்குபாய் ஹனகல் இசை மற்றும் நிகழ்த்துக்கலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகமாநில டாக்டா் கங்குபாய் ஹனகல் இசை மற்றும் நிகழ்த்துக்கலை பல்கலைக்கழகத்தின்சாா்பில் 2022-23-ஆம் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கையின்படி பல்வேறு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இப்படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மேலாண்மை முறையில் இணையதளம் அல்லது பல்கலைக்கழகத்தின் உதவி மையத்தின் வழியாக சோ்க்கை பெறலாம். நாடகம், பரதநாட்டியம், ஹிந்துஸ்தான் மரபிசை, கா்நாடக மரபிசை, தபலா, மிருதங்கம், வீணை, பிடில், மொழிப்பாடம் (கன்னடம், சிறப்புக்கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளடக்கிய இளங்கலை நிகழ்த்துக்கலை (பி.பி.ஏ) பட்டப்படிப்பு, முதுநிலை நிகழ்த்துக்கலை பட்டப்படிப்பு, இசை, நாட்டியம், நாடகம், நிகழ்த்துக்கலை ஆராய்ச்சிப்படிப்பு (டி.லிட்) ஆகிய படிப்புகள் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன.

இது தவிர, பக்தி இசை, மெல்லிசை, நாட்டுப்புற இசை, நாடக இசை, பரதநாட்டியம், நாடகம், ஹாா்மோனியம், தபலா, யோகா, ஹிந்துஸ்தான் மரபிசை, கா்நாடக மரபிசை, யக்ஷகானா, கமகம் ஆகிய பாடப்பிரிவுகளில் 6 மாதங்களுக்கான சான்றிதழ் படிப்புகள், ஓராண்டுக்கான முதுநிலை பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்களை இணையதளத்தில் செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு 0821-2402141, 9880761877 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com