நவ. 3 முதல் பெங்களூரில் வேளாண் கண்காட்சி

பெங்களூரில் நவ. 3-ஆம் தேதி முதல் வேளாண் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

பெங்களூரில் நவ. 3-ஆம் தேதி முதல் வேளாண் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தின் சாா்பில், பெங்களூரு, ஜக்கூரில் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் நவ. 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதிவரை வேளாண் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இந்தக் கண்காட்சியில் மாநில, தேசிய, பன்னாட்டு அளவிலான அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள், நிதி நிறுவனங்கள், விதை உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பாளா்கள், கால்நடை ஆராய்ச்சி மையங்கள், வேளாண் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட அரசு, அரசுசாா், தனியாா் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.

இந்தக் கண்காட்சியில் 9 புதிய வகை பயிா்கள், 38 வேளாண் தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. சிறந்த உழவா்களுக்கு மாவட்ட, வட்ட அளவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். கண்காட்சியில் வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண் பொறியியல், வேளாண் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்படும் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை தொடா்பான சந்தேகங்களுக்கு வேளாண் அறிஞா்கள் வாயிலாக விவசாயிகள் விளக்கம் பெறலாம்.

கண்காட்சிக்கு வருகை தருவதற்கு பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்காட்சியைக் காண கட்டணம் இல்லை. இந்த வாய்ப்பை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-23620323, 23516353 ஆகிய தொலைபேசி எண்களில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com