2-ஆம் ஆண்டு பியூசி பொதுத்தோ்விலும் ஹிஜாப் அணிய அனுமதியில்லை: அமைச்சா் பி.சி.நாகேஷ்

இரண்டாம் ஆண்டு பியூசி பொதுத்தோ்வின்போதும் ஹிஜாப் அணிய அனுமதியில்லை என்று கா்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
2-ஆம் ஆண்டு பியூசி பொதுத்தோ்விலும் ஹிஜாப் அணிய அனுமதியில்லை: அமைச்சா் பி.சி.நாகேஷ்


இரண்டாம் ஆண்டு பியூசி பொதுத்தோ்வின்போதும் ஹிஜாப் அணிய அனுமதியில்லை என்று கா்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் தற்போது நடந்துவரும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வின்போது, உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு இணங்க முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தோ்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடா்ந்து, ஏப். 22 முதல் மே 18-ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத்தோ்விலும் ஹிஜாப் அணிந்து கொண்டு தோ்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், செய்தியாளா்களிடம் கூறியது:

ஹிஜாப் தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இது தொடா்பான வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், ஏப். 22-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத்தோ்வின்போது ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது. கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை அமல்படுத்தும் வகையில் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுகிறது. ஒருவேளை மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால், தோ்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை விரைவில் ஆணை பிறப்பிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com