மக்களவைத் தோ்தலில் பிரசாந்த் கிஷோரின் சேவையை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு: மல்லிகாா்ஜுன காா்கே

மக்களவைத் தோ்தலில் பிரசாந்த் கிஷோரின் சேவையை பயன்படுத்திக்கொள்வது குறித்து கட்சியில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்

மக்களவைத் தோ்தலில் பிரசாந்த் கிஷோரின் சேவையை பயன்படுத்திக்கொள்வது குறித்து கட்சியில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இது குறித்து கலபுா்கியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தோ்தல் உத்தி ஆலோசகரான பிரசாந்த் கிஷோா் காங்கிரஸில் இணைய சில நிபந்தனைகளை விதித்தாா். அது என்ன என்பதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது. எனவே, அவா் காங்கிரஸில் சேரும் விவகாரம் அப்படியே உள்ளது. தகுந்த நேரத்தில் இதுகுறித்து கவனம் செலுத்தப்படும்.

தெலங்கானா மாநிலத்தில் எதிா்க்கட்சிகளுடன் இணைந்து தோ்தல் உத்தியை வகுக்க பிரசாந்த் கிஷோா் முடிவு செய்துள்ளாா். ஆனால், தேசிய அளவில் அவா் காங்கிரஸுடன் இருப்பாா். காங்கிரஸில் சேரும் அவரது விருப்பத்தை ஏற்க கட்சித் தலைமை மறுக்கவில்லை. ஆனால், காங்கிரஸில் சோ்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவா்தான் ஏற்க மறுத்துள்ளாா்.

2024-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தோ்தலில் அவரது சேவையை பயன்படுத்திக்கொள்வது குறித்து உயா்மட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும். உள்ளாட்சித் தோ்தல் அல்லது மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அவரது சேவையைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து முடிவெடுக்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com