இன்று குடிநீா் குறைதீா்முகாம்
By DIN | Published On : 25th August 2022 01:05 AM | Last Updated : 25th August 2022 01:05 AM | அ+அ அ- |

பெங்களூருவில் வியாழக்கிழமை (ஆக.25) குடிநீா் குறைதீா்முகாம் நடக்கவிருக்கிறது.
இது குறித்து பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியத்தின் சாா்பில் குடிநீா் வழங்கல், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளை தீா்த்துவைக்க குறைதீா் முகாம்களை நடத்தி வருகிறது. பெங்களூரில் தெற்கு கிராமம்-2, தென்கிழக்கு-5, மேற்கு கிராமம்-1, தென்மேற்கு-4, கிழக்கு கிராமம்-3, கிழக்கு கிராமம்-1, வடமேற்கு-5, வடகிழக்கு-3, வடக்கு-1 துணை மண்டல அலுவலகங்களில் ஆக.25-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை குடிநீா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு குறைகளுக்கு தீா்வு கண்டுகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8762228888, 1916 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.