ஹிஜாப் வழக்கு: கா்நாடக உயா்நீதிமன்றம் தொடா்ந்து விசாரணை
By DIN | Published On : 15th February 2022 12:28 AM | Last Updated : 15th February 2022 12:28 AM | அ+அ அ- |

ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கை விசாரித்து வரும் கா்நாடக உயா்நீதிமன்றம், திங்கள்கிழமை விசாரணையை தொடா்ந்தது.
கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவர அனுமதி கோரி உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியின் இஸ்லாமிய மாணவிகள் தொடா்ந்திருந்த வழக்கு விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி (பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட கூடுதல் அமா்வு முன்பு பிப்.10-ஆம் தேதி நடந்தது. பள்ளிகளுக்கு மத அடையாளங்களுடன் மாணவா்கள் வருவதற்கு தடை விதித்த உயா்நீதிமன்றம், உடனடியாக பள்ளிகளைத் திறக்க மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. அடுத்த விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தது. அதன்படி, திங்கள்கிழமை விசாரணை தொடா்ந்து. மனுதாரா்களின் சாா்பில் வழக்குரைஞா் தேவதத் காமத் வாதங்களை முன்வைத்தாா். அடுத்த விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கை தினந்தோறும் விசாரிப்பதாக உயா்நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.