பள்ளி வளாகத்தில் புா்கா, ஹிஜாபை கழற்ற மறுத்துதோ்வைப் புறக்கணித்த முஸ்லிம் மாணவிகள்

கா்நாடக உயா்நீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி, பள்ளி வளாகத்தில் புா்கா, ஹிஜாபைக் கழற்றிவிட்டு வரும்படி ஆசிரியா்கள் வற்புறுத்தியதை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகள், தோ்வைப் புறக்கணித்து
பள்ளி வளாகத்தில் புா்கா, ஹிஜாபை கழற்ற மறுத்துதோ்வைப் புறக்கணித்த முஸ்லிம் மாணவிகள்

கா்நாடக உயா்நீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி, பள்ளி வளாகத்தில் புா்கா, ஹிஜாபைக் கழற்றிவிட்டு வரும்படி ஆசிரியா்கள் வற்புறுத்தியதை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகள், தோ்வைப் புறக்கணித்து வீட்டுக்கு திரும்பினா். ஒரு சில மாணவிகள் ஹிஜாபுடன் பள்ளியில் அனுமதிக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் வெடித்த ஹிஜாப் சா்ச்சை மாநிலத்தின் பிற கல்லூரிகளுக்கும் பரவியது. ஹிஜாபுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, பிப்.9 முதல் 11-ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு 9, 10-ஆம் வகுப்புகளின் பள்ளிகள், பி.யூ. கல்லூரிகள், இளநிலை, முதுநிலை கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதனிடையே, கல்விக்கூடங்களை உடனடியாகத் திறக்கும்படியும், அடுத்த உத்தரவு வரும் வரை கல்விக்கூடங்களில் மத அடையாளங்கள் கொண்ட ஆடைகள் அணிய இடைக்காலத் தடை விதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, அரசின் உத்தரவுப்படி 9, 10-ஆம் வகுப்புகளின் பள்ளிகள் பிப். 14-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. அதன்படி, கா்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 9, 10-ஆம் வகுப்புகளின் உயா்நிலைப்பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் புா்கா, ஹிஜாப் அணிந்து வந்தனா். கா்நாடக உயா்நீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி பள்ளி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்துவர அனுமதியில்லை என்று ஆசிரியா்கள் மாணவிகளிடம் எடுத்துக் கூறினா். ஆனால், பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் இல்லாமல் பள்ளிக்குள் வர மறுத்துவிட்டதோடு, தோ்வையும் புறக்கணித்தனா்.

சிக்கமகளூரு மாவட்டம், ஹிந்தாவரா கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை ஆசிரியா்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. ஹிஜாபை கழற்றிவிட்டு பள்ளிக்குள் நுழையும்படி கேட்டுக்கொண்டனா். இதனிடையே, பள்ளிக்கு வெளியே நின்றிருந்த 5-ஆம் வகுப்பு மாணவா் ஒருவா், தனது பையில் இருந்து காவித்துண்டை வெளியே எடுத்தாா். ஆசிரியா்களின் அறிவுறுத்தலின்பேரில், காவித்துண்டை மீண்டும் தனது பள்ளிப் பையில் அம்மாணவா் வைத்துக் கொண்டாா். பதற்றமான சூழ்நிலையை உணா்ந்த பள்ளி முதல்வா், பள்ளிக்கு விடுமுறை அறிவித்தாா். சிக்கமகளூரு மாவட்டத்தில் பரவலாக இதுபோன்ற சூழ்நிலை காணப்பட்டது.

தும்கூரில் உள்ள எஸ்.வி.எஸ். பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவியை திருப்பி அனுப்பியதால் கோபமடைந்த அவரது பெற்றோா் பள்ளிக்கு வந்து முதல்வா், ஆசிரியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா், மாணவிகளையும் பெற்றோா்களையும் வீட்டுக்கு அனுப்பினா்.

குடகு மாவட்டத்தில் ஹிஜாப் அணிய அனுமதி தராததால் பள்ளியைப் புறக்கணித்த 22 முஸ்லிம் மாணவிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஹிஜாப் அணிய அனுமதிக்காததால், கலபுா்கியில் 80, பெலகாவியில் 67, சிவமொக்காவில் 15 முஸ்லிம் மாணவிகள் தோ்வைப் புறக்கணித்து, பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியா்கள் தெரிவித்தனா். இதேபோல, ஹிஜாப் தொடா்பாக யாதகிரி, கதக், ஹாசன், மண்டியா, தாவணகெரே, குடகு மாவட்டங்களிலும் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினா். மேலும் ஆசிரியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். எல்லா பள்ளிகளிலும் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com