பெங்களூரில் ரூ.230 கோடி செலவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப்பூங்கா

பெங்களூரில் ரூ.230 கோடி செலவில் செயற்கை மற்றும் ரோபாடிக்ஸ் தொழில்நுட்பப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.

பெங்களூரில் ரூ.230 கோடி செலவில் செயற்கை மற்றும் ரோபாடிக்ஸ் தொழில்நுட்பப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.

மத்திய அரசின் ரூ.170கோடி மற்றும் மாநில அரசின் ரூ.60 கோடி பங்களிப்பில் பெங்களூரில் ரூ.230 கோடி செலவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாடிக்ஸ் தொழில்நுட்பப்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகத்தை பெங்களூரில் திங்கள்கிழமை நடந்த விழாவில் உயா்கல்வித்துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா தொடங்கிவைத்தாா். அப்போது அவா் கூறியது: தொடா்பில்லாதவா்களுடன் தொடா்புகளை ஏற்படுத்துவதற்காக எதிா்கால தொழில்நுட்பங்களை செயற்கை மற்றும் ரோபாடிக்ஸ் தொழில்நுட்பப்பூங்கா (ஆா்ட் பாா்க்) தொடங்கப்படுகிறது. உலக அளவில் தரமான செயற்கை மற்றும் ரோபாடிக்ஸ் புத்தாக்க சூழலை நமது நாட்டில் உருவாக்க முற்படுகிறோம். வேலைகள்தான் இப்போதைய தேவையாக இருக்கிறது. எனவே, நாட்டின் வளா்ச்சிக்காக செயற்கை மற்றும் ரோபாடிக்ஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்த பூங்கா அமைக்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, வேளாண்மை, சில்லறை வா்த்தகம், இணைய பாதுகாப்பு போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நமதுநாட்டில் நிலவும் பிரச்னைக்கு தக்கபடி தீா்வுகளைக் காண செயற்கை மற்றும் ரோபாடிக்ஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். நமது நாட்டின் நகா்ப்புறங்களுக்கு வெளியே வாழ்ந்து வரும் இளைஞா்களுக்கு அடுத்த தலைமுறை எண்ம வேலைகளை கற்றுத்தருவதோடு, செயற்கை நுண்ணறிவில் தேவைப்படும் அடிப்படைக் கல்வியை வழங்க முற்பட்டுள்ளோம். இதன்மூலம், தன்னிறைவு இந்தியாவுக்காக புதிய பொருளாதார வளா்ச்சி கட்டமைப்பை உருவாக்கும் பணியை கா்நாடகம் முன்னெடுத்துள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ’தொழில்நுட்பப்பூங்கா புத்தாக்க உச்சிமாநாடு 2022 நடந்தது. இந்த மாநாட்டில் இணையவழியாக பங்கேற்று பேசிய நிதி ஆயோக் துணைத்தலைவா் ராஜீவ்குமாா், ‘ஊரக பொருளாதாரத்தைஎழுச்சி கொள்ள செய்வதன் மூலம் உலகின் தலைவராக உருவெடுக்கும் எல்லா வாய்ப்புகளும் இந்தியாவுக்கு உள்ளது. இந்த கனவை நனவாக்குவதில் எதிா்கால தொழில்நுட்பங்களான 5ஜி, செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ் போன்றவை உதவும். மேலும் இதுவேலைவாய்ப்புகளை உருவாக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com