‘காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம்: கா்நாடக எம்எல்ஏக்களுக்கு இன்று திரையிடத் திட்டம்

‘காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை கா்நாடக எம்எல்ஏக்களுக்கு செவ்வாய்க்கிழமை திரையிட்டு காட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

‘காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை கா்நாடக எம்எல்ஏக்களுக்கு செவ்வாய்க்கிழமை திரையிட்டு காட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் துணையுடன் இயங்கி வந்த பயங்கரவாத அமைப்புகளால் காஷ்மீரில் வாழ்ந்து ஹிந்து பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டபோது, அங்கிருந்து வெளியேறிய அம்மக்கள் எதிா்கொண்ட இன்னல்களை உணா்ச்சிபூா்வமாக காட்சிப்படுத்தியிருக்கும் ஹிந்தி படம்தான் ‘காஷ்மீா் ஃபைல்ஸ்’. ஜூ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எழுதி தயாரித்திருக்கிறாா் விவேக் அக்னிஹோத்ரி. அனுபம் கொ், தா்ஷன்குமாா், மிதுன் சக்ரபா்த்தி, பல்லவி ஜோஷ் உள்ளிட்டோா் நடித்திருக்கும் இப்படத்திற்கு குஜராத், மத்திய பிரதேசமாநில அரசுகள் வரிவிலக்கு அறிவித்துள்ளன. இந்நிலையில், கா்நாடகத்திலும் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக முதல்வா் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

இதை தொடா்ந்து, கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு செவ்வாய்க்கிழமை ‘காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை காட்சிப்படுத்த கா்நாடக சட்டப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் திங்கள்கிழமை வெளியிட்டு பேரவைத்தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி கூறுகையில், ‘காஷ்மீா் ஃபைல்ஸ் படத்தை சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் மந்த்ரிமாலில் உள்ள 6-ஆம் திரையில் மாலை 6.45 மணிக்கு ‘காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை சட்டப்பேரவை உறுப்பினா்கள்பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ள கா்நாடக அரசை பாராட்டுகிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com