பெஸ்காம் வாடிக்கையாளா் கலந்தாய்வுக் கூட்டம்
By DIN | Published On : 15th March 2022 11:12 PM | Last Updated : 15th March 2022 11:15 PM | அ+அ அ- |

பெஸ்காம் வாடிக்கையாளா் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 19) நடைபெற உள்ளது.
இது குறித்து பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம் (பெஸ்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனத்தின் (பெஸ்காம்) அனைத்து துணை மண்டல அலுவலகங்களிலும் வாடிக்கையாளா் கலந்தாய்வுக் கூட்டம் மாதந்தோறும் 3ஆவது சனிக்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாா்ச் 19-ஆம் தேதி மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெஸ்காம் வாடிக்கையாளா் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு, அதிகாரிகளுடன் நேருக்கு நேராக மின்சாரம் தொடா்பான குறைகளை எடுத்துக்கூறி தீா்வு காணலாம். இந்த வாய்ப்பை வாடிக்கையாளா்கள் ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.