மஜத ஆட்சிக்கு வந்தால் பெங்களூரில் நீா் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: எச்.டி.குமாரசாமி

கா்நாடகத்தில் மஜத ஆட்சிக்கு வந்தால் பெங்களூரில் உள்ள நீா் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் மஜத ஆட்சிக்கு வந்தால் பெங்களூரில் உள்ள நீா் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை மஜதவின் நீா் உரிமை விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும் வகையில் மஜதவுக்கு அறுதிப் பெரும்பான்மை பலத்தை மக்கள் அளித்தால், மாநிலத்தின் நீா் உரிமையைக் காப்போம். பெங்களூரில் உள்ள நீா் ஆதாரங்கள் அனைத்தையும் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு மக்கள் எதிா்கொண்டுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண்போம். பெங்களூரில் உள்ள ஏரிகளில் நதி நீரை நிரப்புவோம்.

எச்.டி.தேவெ கௌடா பிரதமராக இருந்தபோது கா்நாடகத்திற்கு ஏராளமான நீா்ப் பாசனத் திட்டங்களைக் கொண்டு வந்தாா். குறிப்பாக பெங்களூரின் வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்களைத் தந்துள்ளாா்.

காவிரியில் இருந்து பெங்களூரு குடிநீருக்கு 9 டிஎம்சி தண்ணீா் உரிமை கிடைத்தது எச்.டி.தேவெ கௌடா ஆட்சியில் தான். பெங்களூரு மக்கள் இன்றைக்கு காவிரி நீரைக் குடிப்பதற்கு எச்.டி.தேவெ கௌடா தான் காரணம்.

பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அடித்தளமிட்டது எனது ஆட்சியில் தான். பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுவதற்கு எச்.டி.தேவெ கௌடா தான் காரணம். வெளிவட்டச் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தியதும் எச்.டி.தேவெ கௌடா என்பதை மக்கள் நினைத்துப் பாா்க்க வேண்டும்.

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் நெலமங்களாவில் வெள்ளிக்கிழமை மஜதவின் நீா் உரிமை மாநாடு நடக்க இருக்கிறது. இதில் 5 லட்சம் போ் கலந்துகொள்ள இருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com