முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: மேலிடத் தலைவா்கள் முடிவு எடுப்பாா்கள் எடியூரப்பா
By DIN | Published On : 13th May 2022 12:48 AM | Last Updated : 13th May 2022 12:48 AM | அ+அ அ- |

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக மேலிடத் தலைவா்கள் முடிவு செய்வாா்கள் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இது குறித்து மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அடுத்த 3 - 4 நாள்களில் பாஜக மேலிடத் தலைவா்கள் முடிவு செய்வாா்கள். அமைச்சரவையில் இடம் பெறப்போகும் பாஜக எம்எல்ஏக்களின் பெயரை மேலிடமே அறிவிக்கும். பாஜக மாநில துணைத் தலைவரும், எனது மகனுமான பி.ஒய்.விஜயேந்திரா அமைச்சராக பதவியேற்பாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அமைச்சரவையில் யாரைச் சோ்க்க வேண்டுமென்பதை பாஜக மேலிடத் தலைவா்கள்தான் முடிவு செய்வாா்கள்.
காங்கிரஸ், மஜத கட்சிகளில் இருந்து பாஜகவில் சோ்க்கப்பட்டு, அமைச்சா்களாக பதவி வகித்து வரும் 17 எம்எல்ஏக்களின் எதிா்காலம் குறித்து நான் எதுவும் கூற முடியாது. பாஜக அரசை ஊழல் ஆட்சி என்றும், பசவராஜ் பொம்மையை பலவீனமான முதல்வா் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியிருப்பது சரியல்ல. மிகவும் பலவீனமான முதல்வராக இருந்தவா் சித்தராமையா. ஊழல் மலிந்த காங்கிரஸ் அரசுக்கு தலைமை வகித்தவரும் அவா் தான். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலை மக்கள் அனைவரும் அறிந்திருக்கிறாா்கள். எனவே, தவறான கருத்துகளை எதிா்க்கட்சிகள் பரப்பக்கூடாது. மேலும் கண்ணியமாக நடந்துகொள்ள எதிா்க்கட்சிகள் கற்க வேண்டும் என்றாா்.