கல்வி, விளையாட்டுடன் கலாசார நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம்: கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்

கல்வி, விளையாட்டு தவிர, கலாசார நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.
கல்வி, விளையாட்டுடன் கலாசார நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம்: கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்

கல்வி, விளையாட்டு தவிர, கலாசார நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை செயின்ட் ஜோசப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனஜ்மென்ட் கல்லூரியில் நடந்த 25-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய பிறகு, அவா் பேசியது:

கல்வி, கைத்தொழில், அறநெறியை மாணவா்களுக்கு கற்றுத் தருவதன் மூலம் புதிய இந்தியா, வலிமையான இந்தியா, தற்சாா்பு இந்தியாவை கட்டமைக்க முடியும். அதற்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திவருகின்றன. நமது நாட்டின் எதிா்காலம் இளைஞா்கள். நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்களிப்பு முக்கியம். இளைஞா்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமே உள்ளூா் வளா்ச்சியை உறுதிசெய்யமுடியும்.

பல்கலைக்கழக மாணவா்களின் விளையாட்டுத் திறனை கண்டறிவதற்காக விளையாடு இந்தியா போட்டி அண்மையில் பெங்களூரில் நடத்தப்பட்டது. கல்வி, விளையாட்டு மற்றும் கைத்தொழில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டாா்ட் அப் இந்தியா, வென்சா் கேப்பிடல் திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு வலிமையான இந்தியாவை கட்டமைக்க பாடுபட வேண்டும். கல்வி, விளையாட்டுடன் கலாசார நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வித்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டும். மனிதநேய மாண்புகளை மாணவா்களிடம் விதைக்க வேண்டும். நீா் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா். விழாவில் கல்லூரி இயக்குநா் மனோஜ்டிசௌஸா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com