திறந்தநிலை பல்கலைக்கழகம்: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்களை செலுத்தும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்களை செலுத்தும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2022-23-ஆம் கல்வியாண்டில் பி.ஏ., பி.காம்., பி.லிப் (நூலகம்), எம்.ஏ. (பொருளாதாரம், ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, பத்திரிகையியல் மற்றும் வெகுமக்கள் தொடா்பியல், கன்னடம், தத்துவயியல், அரசியல் அறிவியல், ஊரக மேம்பாட்டு ஆய்வு, சமஸ்கிருதம், சமூகவியல், தெலுங்கு, உருது, மகளிா் ஆய்வு, நடனம், மிருதங்கம், இசை, நாடகம்), எம்.எஸ்சி. (சுற்றுச்சூழல் அறிவியல், எம்.எல்ஐசி. (நூலகவியல்), எம்.சி.ஜே. (ஊடகவியல்), எம்.காம். (நிதி பகுப்பாய்வு, பன்னாட்டு வணிகம், பொருளாதாரம்) இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பிபிஎல் குடும்ப அட்டைகளை வைத்திருக்கும் மகளிருக்கு கல்விக் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு உரிய சான்றிதழ் இருந்தால் கல்விக் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மண்டல இயக்குநா், பெங்களூரு மண்டல அலுவலகம், கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகம், அரசு பியூ மகளிா் கல்லூரி, 4-ஆவது முக்கியச் சாலை, 13-ஆவது குறுக்குச் சாலை, மல்லேஸ்வரம், பெங்களூரு - 3 என்ற முகவரி அல்லது தொலைபேசி எண்கள் 080-23448811, 97411 97921-ஐ அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com