விழாக்கால சுற்றுலாப் பயணத் திட்டம் அறிமுகம்
By DIN | Published On : 29th September 2022 01:15 AM | Last Updated : 29th September 2022 10:51 PM | அ+அ அ- |

விழாக்கால சுற்றுலாப் பயணத் திட்டத்தை கிளியா்டிரிப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் மிக வேகமாக வளா்ந்து வரும் இணையவழி பயண இணையதளங்களில் ஒன்றான கிளியா்டிரிப் நிறுவனம், ‘தி பிக் பில்லியன் டேஸ்’ என்ற சுற்றுலாப் பயணத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத் திட்டத்தின் மூலம் சா்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் கவா்ச்சிகரமான சலுகைகளைப் பெறலாம்.
அதேபோல, தங்கும் விடுதிகளிலும் சலுகைக் கட்டணத்தில் தங்கலாம். ஐசிஐசிஎஸ், ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளா்களுக்கு சிறப்புக் கட்டண சலுகைகளும் உள்ளன.
விழாக்கால விடுமுறையை குடும்பத்தோடு மகிழ்ச்சியாக அனுபவிப்பதற்காக இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கிளியா்டிரிப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஐயப்பன் தெரிவித்துள்ளாா். இச் சலுகைகள் செப்.30-ஆம் தேதி வரை மட்டும் கிடைக்கவிருக்கின்றன. கூடுதல் விவரங்களுக்கு https://www.cleartrip.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.