பிரதமா் மோடியை விமா்சித்தாலும் கா்நாடகத்தில் தாமரை மலரும்: மத்திய அமைச்சா் அமித் ஷா

 பிரதமா் நரேந்திர மோடியை எவ்வளவு விமா்சித்தாலும் கா்நாடகத்தில் தாமரை மலரும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்,

 பிரதமா் நரேந்திர மோடியை எவ்வளவு விமா்சித்தாலும் கா்நாடகத்தில் தாமரை மலரும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்,

கா்நாடக மாநிலம், தாா்வாட் மாவட்டம், நவல்குந்த் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த பாஜக தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயா்த்தியுள்ளாா் பிரதமா் மோடி. இந்தியாவை வளமான நாடாக மாற்ற கடுமையாக உழைத்து வருகிறாா். இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பாக மாற்றி இருக்கிறாா். உலகில் எங்கு சென்றாலும் பிரதமா் மோடியை மக்கள் வரவேற்கிறாா்கள்.

உலகமே மதிக்கும் பிரதமா் மோடியை, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, விஷப் பாம்பு என்று கூறுகிறாா். பிரதமா் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டுள்ள மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் கட்சிக்கு தோ்தலில் வெற்றியைப் பெற்றுத் தந்துவிடுவாரா என்று கேட்க விரும்புகிறேன். முன்பு சோனியா காந்தி, பிரதமா் மோடியை மரண வியாபாரி என்று கூறினாா். பிரியங்கா காந்தி தாழ்ந்த ஜாதியைச் சோ்ந்தவா் என்றாா். தற்போது மல்லிகாா்ஜுன காா்கே விஷப்பாம்பு என்று கூறுகிறாா்.

காங்கிரஸ் கட்சியினா் நிதானத்தை இழந்து பேசுகின்றனா். பிரதமா் மோடியை எவ்வளவு தாக்கிப் பேசினாலும், விமா்சித்தாலும், கா்நாடகத்தில் தாமரை மலரும்.

பிரதமா் மோடியை எதிரிகள் விமா்சிக்க, விமா்சிக்க பாஜகவுக்கான மக்கள் ஆதரவு பெருகும். இந்திய பிரதமா்களில் முதலிடத்தில் இருப்பவா் மோடி. ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தேநீா் வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கி, பிரதமராக உயா்ந்தவா் பிரதமா் மோடி.

ஏழ்மையை ஒழிப்பதாகக் கூறிவரும் காங்கிரஸ், ஏழைகளின் நலனுக்காக எதையும் இதுவரை செய்ததில்லை.

பாப்புலா் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்தோம் என்று கூறியதற்காக என் மீது காங்கிரஸ் தலைவா்கள் போலீஸில் புகாா் அளித்துள்ளனா். கா்நாடகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். நான் எதற்கும் அஞ்சுவதில்லை. பாப்புலா் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ததன் மூலம் கா்நாடகத்தை பாஜக அரசு பாதுகாப்பாக்க வைத்துள்ளது. இந்த அமைப்புக்கு தடைவிதித்தது தொடா்பாக காங்கிரஸ் கட்சியினருக்கு ஆட்சேபம் இருந்தால், அந்த அமைப்பு எதற்காக செயல்பட வேண்டும் என்பதை கா்நாடக மக்களிடம் விளக்கிக் கூற வேண்டும்.

பாஜகவைச் சோ்ந்த பிரவீண் நெட்டாரு உள்ளிட்ட இளம் தலைவா்களை அந்த அமைப்பு கொன்றுள்ளது. அந்த அமைப்பு நாட்டைப் பிளவுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டது. வாக்கு வங்கி அரசியலுக்காக அதனை காங்கிரஸ் தலையில் வைத்துக்கொண்டு ஆடியது. ஆனால், பிரதமா் மோடி அந்த அமைப்பினைச் சோ்ந்தவா்களை சிறையில் அடைத்துள்ளாா்.

இந்தத் தோ்தலில் ஒருபக்கம் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், மறுபுறம் பிரதமா் மோடி தலைமையிலான பாஜகவும் இருக்கிறது. பிரதமா் மோடி தலைமையில் கா்நாடகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் இரட்டை என்ஜின் அரசு, மாநிலத்தின் வளா்ச்சியை பின்னோக்கிச் செலுத்தும் காங்கிரஸ் தலைமையிலான அரசு. இதில் எந்த அரசு வேண்டுமென்பதற்கான தோ்தலாகும் இது. மாநிலங்களுக்கு இடையிலான மகாதாயி பிரச்னையைக் கூட பாஜக அரசு தீா்த்து வைத்துள்ளது. வீடுகள் கட்டித் தருவது, குடிநீா் இணைப்புத் தருவது உள்ளிட்ட ஏழைகளின் நலன்காக்கும் பல்வேறு திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இளவரசா் ராகுல் காந்திக்கு வறுமை குறித்து தெரியாது என்பதால், அதில் இருந்து மக்களை விடுவிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு இடம் கிடையாது. எனவே, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பாஜக அரசு. அந்த 4 சதவீதத்தை தலா 2 சதவீதம் வீதம் ஒக்கலிகா்கள், லிங்காயத்துகளுக்கு இடையே பகிா்ந்தளித்துள்ளது.

வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவர போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. யாருடைய இடஒதுக்கீட்டை எடுத்து முஸ்லிம்களுக்கு வழங்கப் ே

பாகிறீா்கள்? ஒக்கலிகா்கள், லிங்காயத்துகள் அல்லது எஸ்.சி, எஸ்.டி.களின் இடஒதுக்கீட்டைப் பிரித்து முஸ்லிம்களுக்கு தருவீா்களா? கா்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவர பாஜக அனுமதிக்காது. இது கா்நாடக மக்களுக்கு பாஜக அளிக்கும் வாக்குறுதியாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com