கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறாது: சித்தராமையா

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறாது என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறாது என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

கலபுா்கியில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியின் ‘மக்கள் குரல்’ என்ற தோ்தல் பிரசாரப் பயணத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ‘மக்கள் குரல்’ என்ற பெயரில் பேருந்து பிரசாரப் பயணத்தை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதற்கான தீா்வுகளை வகுப்போம்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தோ்தல் அறிக்கையில் கொடுத்திருந்த எல்லா வாக்குறுதிகளையும் காங்கிரஸ் நிறைவேற்றியது. இதை யாா் வேண்டுமானாலும் ஆராய்ந்து தெரிந்துகொள்ளலாம். அன்னபாக்கியா, ஷீரபாக்கியா, ஷீரதாரா, கிருஷிபாக்கியா போன்ற பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தியது. சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சிப் பொறுப்பை தந்தால், கல்யாண கா்நாடகப் பகுதியின் வளா்ச்சிக்கு ரூ. 5 ஆயிரம் கோடி நிதி வழங்குவோம்.

கா்நாடகத்தில் 36 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், முதல்வா் பசவராஜ் பொம்மை யாருக்கும் வேலை தரவில்லை. நான் முதல்வராக இருந்த போது, அன்னபாக்கியா திட்டத்தில் 7 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தேன். ஆனால், பாஜக அரசு இதை 5 கிலோவாக குறைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு அளித்தால், அன்னபாக்கியா திட்டத்தில் 10 கிலோ அரிசியை வழங்குவோம்.

நல்ல காலம் வரும் என்று பிரதமா் மோடி தெரிவித்திருந்த வாக்குறுதி என்னானது? மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 413-ஆக இருந்தது. இது தற்போது ரூ. 1,200-ஆக உயா்ந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு ரூ. 29 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளது. ஆனால், மக்கள் நலன்சாா்ந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு வகுத்த திட்டங்களை தொடக்கிவைக்க பிரதமா் மோடி பெங்களூருக்கு வந்திருக்கிறாா். கரோனா காலத்தில் ஒருமுறையாவது பிரதமா் மோடி கா்நாடகம் வந்தாரா? பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்டோா் எத்தனை முறை வேண்டுமானாலும் கா்நாடகத்துக்கு வரலாம். ஆனால், சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com