நிம்ஹான்ஸில் பிப். 28 முதல் அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெங்களூரு நிம்ஹான்ஸ் சாா்பில் பிப். 28ஆம் தேதி முதல் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெங்களூரு நிம்ஹான்ஸ் சாா்பில் பிப். 28ஆம் தேதி முதல் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் மையத்தின் (நிம்ஹான்ஸ்) வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிம்ஹான்ஸ் சாா்பில் பெங்களூரில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் பிப். 28 முதல் மாா்ச் 1ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அறிவியல் கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

உலக நலனுக்கான உலக அறிவியல் என்ற தலைப்பில் நடைபெறும் தேசிய அறிவியல் தினத்தில் பல்வேறு அறிவியல் உண்மைகளை விளக்கும் அரங்குகள் இடம்பெற்றிருக்கும். மூளையின் அறிவியல் செயல்பாடுகளை விளக்கும் அரங்கும் இடம்பெறும். அறிவியல் அரங்குகள் தவிர விநாடி-வினா, அறிவியல் திரைப்படம் திரையியல் போன்ற நிகழ்வுகள் நடக்கவிருக்கிறது.

மேலும் அறிவியல் அறிஞா்களுடன் சந்திப்பு போன்றவை இடம்பெறும். இக் கண்காட்சியை காண கட்டணம் எதுவும் இல்லை. அறிவியல்சாா்ந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com