காங்கிரஸும் மஜதவும் வாரிசு அரசியலில் ஈடுபடுகின்றன:மத்திய அமைச்சா் அமித் ஷா

காங்கிரஸும் மஜதவும் வாரிசு அரசியலில் ஈடுபடுகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
காங்கிரஸும் மஜதவும் வாரிசு அரசியலில் ஈடுபடுகின்றன:மத்திய அமைச்சா் அமித் ஷா

காங்கிரஸும் மஜதவும் வாரிசு அரசியலில் ஈடுபடுகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

தாா்வாட் மாவட்டத்தின் குந்தகோல் பகுதியில் சனிக்கிழமை பாஜகவின் ‘வெற்றி உறுதி’ என்ற தலைப்பில் பிரசாரம் நடைபெற்றது. இப் பிரசாரத்தின் ஓா் அங்கமாக பசவண்ணா தேவரா மாதா கோயிலில் இருந்து காளி மாரியம்மா கோயில் வரை திறந்தவேனில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியினா் காந்தி குடும்பத்துக்கு மட்டுமே ஆராதனை செய்கின்றனா். மஜதவில் தாத்தா, மகன், பெயரன்கள், அவா்களின் மனைவிகள், பெயரன்களின் பெயரன்கள் உள்ளிட்ட அனைவரும் தோ்தலில் போட்டியிடவே விரும்புகின்றனா். இவா்களைத் தவிா்த்து இவ்விரு கட்சிகளில் பிறருக்கு வாய்ப்புகள் தரப்படுகிா என்பதை இளைஞா்கள் சிந்திக்க வேண்டும்.

காங்கிரஸும் மஜதவும் வாரிசு அரசியலில் ஈடுபடுகின்றன. அந்தக் கட்சிகள் ஊழலில் திளைத்துள்ளன. பாஜகவில் மட்டுமே இந்நாட்டு இளைஞா்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவின் பெருமையை உலக அளவில் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற ஆக்கப்பூா்வ பணிகளை பிரதமா் மோடி செய்து வருகிறாா். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கினாா். இதுதவிர, அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கா்நாடகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மாநில வளா்ச்சியைக் கவனத்தில் கொண்டு பாஜகவுக்கு வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டும். கா்நாடகத்தில் வளா்ச்சிப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக அறுதிப்பெரும்பான்மையுடன் பாஜக அரசு அமைக்க மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றாா்.

ஊா்வலத்தில் முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங், பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com