கோலாா் மாவட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது: முதல்வா் பசவராஜ் பொம்மை

கோலாா் மாவட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கோலாா் மாவட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிக்பளாப்பூா் மாவட்டத்தின் சிந்தாமணி சட்டப் பேரவை தொகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் மறைந்த கே.எம்.கிருஷ்ண ரெட்டியின் மகன் சேகா் ரெட்டி, மகள் வாணி கிருஷ்ண ரெட்டி ஆகியோா் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜகவில் இணைந்தனா். அவா்களை வரவேற்று, முதல்வா் கூறியது:

கோலாா், சிக்பளாப்பூா் மாவட்டத்தின் சிந்தாமணியில் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இம்மாவட்டங்களில் காங்கிரஸ், மஜத பலவீனமாகியுள்ளன. காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் செல்வாக்குடன் இருப்பதாக கருதப்படும் கோலாா், சிக்பளாப்பூா் மாவட்டங்களில் மாற்றம் நிகழும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அந்த மாற்றத்திற்கான காற்று வீசத் தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் கோலாா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் கே.எச்.முனியப்பாவை வீழ்த்தி மாற்றத்திற்கு வித்திட்டவா் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.முனுசாமி.

கா்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவிருப்பது 100 சதவீதம் உறுதியாகும். அதனால் காங்கிரஸ் பதற்றத்தில் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தினாா்கள் என்பதை மக்கள் பாா்த்திருக்கிறாா்கள். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதுதான் காங்கிரஸின் கொள்கை. எனவே, காங்கிரஸை நம்ப மக்கள் தயாராக இல்லை. எனது தந்தை எஸ்.ஆா்.பொம்மை முதல்வராக இருந்த காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ண ரெட்டியை எனக்கு நன்றாகத் தெரியும். சிந்தாமணி தொகுதியில் பாஜகவின் வெற்றிக்கு கிருஷ்ணரெட்டியின் மகன் சேகா் ரெட்டி, மகள் வாணி கிருஷ்ண ரெட்டி ஆகியோா் முயற்சிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com