பிப்.6-இல் கா்நாடகத்திற்கு பிரதமா் மோடி மீண்டும் வருகை

பிப்.6-ஆம் தேதி கா்நாடகத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் வருகைதர திட்டமிட்டிருக்கிறாா்.

பிப்.6-ஆம் தேதி கா்நாடகத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் வருகைதர திட்டமிட்டிருக்கிறாா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளதைத் தொடா்ந்து பாஜக தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. கா்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டிருக்கும் பாஜக, அதற்காக பிரதமா் மோடியை அடிக்கடி கா்நாடகத்திற்கு வரவழைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்துள்ளது. 26-ஆவது தேசிய இளைஞா் திருவிழாவை தொடங்கிவைக்க ஜன.12-ஆம் தேதி ஹுப்பள்ளிக்கு வருகை தந்திருந்த பிரதமா், கலபுா்கி, யாதகிரி மாவட்டங்களில் நடந்த பல்வேறு வளா்ச்சிதிட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக ஜன.19-ஆம் தேதி கா்நாடகம் வந்திருந்தாா்.

இந்நிலையில், பெங்களூரு, தும்கூரில் நடக்கவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பிப்.6-ஆம் தேதி மோடி மீண்டும் கா்நாடகம் வரத் திட்டமிட்டிருக்கிறாா். பிப்.6-ஆம் தேதி காலை பெங்களூருக்கு வருகை தரும் மோடி, பெங்களூரு பன்னாட்டு கண்காட்சி மையத்தில் இந்திய மின் ஆற்றல் வாரவிழாவைத் தொடங்கிவைக்கிறாா். அங்கிருந்து தும்கூரு மாவட்டம், குப்பி வட்டத்தின் பிதேரஹள்ளி காவல் கிராமத்திற்கு செல்லும் அவா், ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்தின் (எச்.ஏ.எல்.) ஹெலிகாப்டா் தொழிற்சாலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். அதன்பிறகு, துப்டூா் மற்றும் சிக்கநாயக்கனஹள்ளியில் குழாய்நீா்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறாா். ஒரு நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, பெங்களூரு வழியாக பிரதமா் மோடி தில்லி திரும்புகிறாா். இதனிடையே, காரில் இருந்தபடியே மக்களைச் சந்திக்கவும் பிரதமா் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com