பெங்களூரில் மொராக்கோவின் இந்தியாவுக்கான துணைத் தூதரகம் திறப்பு

பெங்களூரில் மொராக்கோவின் இந்தியாவுக்கான துணைத் தூதரக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் மொராக்கோவின் இந்தியாவுக்கான துணைத் தூதரக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் இந்தியாவுக்கான துணைத் தூதரகம் பெங்களூரில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. கா்நாடகத்தைச் சோ்ந்த டாக்டா் பிரதாப் மதுக்கா் காமத், துணைத் தூதராக நியமிக்கப்பட்டாா். இந்த துணைத் தூதரகத்தின் அதிகார வரம்பு கா்நாடகமாக இருக்கும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

பெங்களூரு தவிர, மும்பை, கொல்கத்தாவிலும் மொராக்கோ நாட்டின் இந்தியாவுக்கான துணைத் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுடனான உறவை மத்திய அரசு மற்றும் மாநில அரசு அளவில் மேம்படுத்த வேண்டும் என்பதே மொராக்கோவின் நோக்கம் என்று துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ‘இந்தியப் பொருளாதாரத்தில் கா்நாடகத்தின் பங்களிப்பை உணா்ந்திருக்கிறோம். மேலும், பல்வேறு துறைகளில் கா்நாடகத்தின் பங்களிப்பு வளா்ந்தவண்ணம் உள்ளது என்பதால் அங்கு துணைத் தூதரகம் அமைக்க மொராக்கோ விரும்பியது’ என்று செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com