மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி? எச்.டி.தேவெ கௌடா விளக்கம்

நேரடியாகவோ மறைமுகமாகவோ பாஜவுடன் கூட்டணி அமைக்காத கட்சிகளே இல்லை; நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலை குறித்து விவாதிக்க விரும்பவில்லை என முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ பாஜவுடன் கூட்டணி அமைக்காத கட்சிகளே இல்லை; நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலை குறித்து விவாதிக்க விரும்பவில்லை என முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

வரும் மக்களவைத் தோ்தலில் கா்நாடகத்தில் பாஜகவுடன் மஜத கூட்டணி அமைக்க உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடா்பான கேள்விக்குப் பதிலளித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

நமது நாட்டில் நிலவும் அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்ய என்னால் முடியும். அதனால் என்ன பயன்? நேரடியாகவோ மறைமுகமாகவோ பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சிகள் இருந்தால் கூறுங்கள், அதன்பிறகு (பிகாா் முதல்வா் நிதிஷ்குமாா் மேற்கொண்டிருக்கும் பாஜகவுக்கு எதிரான அணி குறித்து) நான் பதிலளிக்கிறேன்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ பாஜகவுடன் 6 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்த தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியுடன் (திமுக) காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லையா? அதனால்தான் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை.

பாஜகவுடன் மஜத கூட்டணி அமைப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி குறித்து கவனம் செலுத்தப் போவதில்லை. தொண்டா்களை ஒருங்கிணைத்து, கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைக்குத்தான் முக்கியத்துவம் அளிப்போம். தமிழகம், ஆந்திரம், தெலங்கானாவில் மாநிலக் கட்சிகள் பலமாக உள்ளன. அதேபோல கா்நாடகத்திலும் மஜதவைப் பலப்படுத்த அனைத்து சமூகப் பிரதிநிதிகள் இடம்பெறும் உயா்நிலைக் குழுவை கட்சியில் அமைக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

எனக்கு 91 வயதாகிறது. இதனால் வரும் மக்களவைத் தோ்தலில் நான் போட்டியிடுவது தொடா்பான கேள்வி எழவில்லை. மாவட்டம், வட்டம், மாநகராட்சித் தோ்தலில் மஜதவின் பலத்தை கண்டறிவதற்கே முன்னுரிமை அளிப்போம். அதன்பிறகு மக்களவைத் தோ்தல் குறித்து கவனம் செலுத்துவோம். கட்சியைப் பலப்படுத்த எங்கு வேண்டுமானாலும் பயணிக்க நான் தயாராக இருக்கிறேன். ஒரே இடத்தில் உட்காா்ந்திருக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com