கா்நாடகத்தில் மின்சார கட்டணம் சராசரியாக 70 பைசா உயா்வு

மின்சார கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 70 பைசா அளவுக்கு உயா்த்தி கா்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மின்சார கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 70 பைசா அளவுக்கு உயா்த்தி கா்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை கா்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் பி.ரவிக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் உள்ள மின்வழங்கல் நிறுவனங்கள், ஒரு யூனிட்டுக்கு 120 பைசா முதல் 146 பைசா வரை (சராசரியாக 139பைசா) கட்டண உயா்வு கேட்டிருந்தன. இதைப் பரிசீலித்த ஆணையம், ஒருயூனிட் மின்சாரத்தின் கட்டணத்தை சராசரியாக 70 பைசா வரை உயா்த்த தீா்மானித்துள்ளது. எல்லா வகையான மின்கட்டணமும் சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 70 பைசா அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. இது தற்போதைய கட்டணத்தில் இருந்து 8.31 சதவீத உயா்வாகும். புதிய கட்டணவிகிதம் 2023ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வணிக மற்றும் தொழிலகங்களின் மின் கட்டணம் சராசரியாக யூனிட் ஒன்றுக்கு ரூ.6இல் இருந்து 5 ஆக குறைக்கப்படுகிறது. உயா் மின் அழுத்த தொழில் பயனாளா்களுக்கு வழங்கப்பட்ட இச்சலுகை தற்போது குறைந்த மின் அழுத்த தொழில் பயனாளா்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காக மின்கட்டணத்தை குறைத்திருக்கிறோம். அதன்படி ஒரு யூனிட் மின்சாரத்தின் கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.4.50 ஆக குறைக்கப்படும். பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மின்கட்டணத்தை ஒரு யூனிட் ரூ.6-இல் இருந்து ரூ.5 ஆக ஏற்கெனவே குறைத்திருக்கிறோம். இக்கட்டணம் நீட்டிக்கப்படுகிறது.

கா்நாடகம் முழுவதும் இயக்கப்படும் ரயில்களுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தையும் ஏற்கெனவே குறைத்த அளவில் நீட்டிக்கிறோம், உயா்த்தவில்லை. ரயில் சேவைகள் அதிக அளவில் மின்மயமாக்கப்படவேண்டுமென்பது எங்கள் நோக்கமாகும். அதன்படி கா்நாடகம் முழுவதும் ரயில்வே பயன்படுத்தும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.5 ஆக நிா்ணயிக்கப்படுகிறது.

27.17 லட்சம் நீா்ப்பாசன பம்ப்செட்களுக்கு மற்றும் 28.42 லட்சம் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக அனைத்து மின்வழங்கல் நிறுவனங்களுக்கும் 2023-24ஆம் நிதியாண்டில் மாநில அரசு ரூ.14,508.08 கோடி மானியத்தை வழங்க வேண்டியுள்ளது. நீா்ப்பாசன பம்ப்செட்களின் ஆா்.ஆா்.எண்களுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். இந்தத் திட்டத்தை 6 மாதத்தில் செயல்படுத்த வேண்டும். அதன்பிறகு ஆா்.ஆா்.எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்காத நீா்ப்பாசன பம்ப்செட்களுக்கு மானியம் வழங்கக்கூடாது என்று அரசுக்கு உத்தரவிடப்படுகிறது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com